• Townsville நகரில் முதன்முறையாக தமிழர் மரபு திங்கள் & தைப்பொங்கல் விழாக்கள்!
    Feb 4 2026
    குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Townsville நகரில் முதன்முறையாக கடந்த சனிக்கிழமை (31 ஜனவரி) தமிழர் மரபு திங்கள் மற்றும் தைப்பொங்கல் என்ற விழாக்களை Townsvill Tamil Community என்ற அமைப்பு கோலாகலமாக கொண்டாடியுள்ளது. இந்த விழா குறித்த தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான Dr சிவஞானம் அகிலன். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
    Mostra di più Mostra meno
    8 min
  • வட்டி விகிதம் உயர்ந்தது: காரணங்களும், தாக்கங்களும்
    Feb 4 2026
    இருபத்தாறு மாத கால இடைவெளிக்குப் பின்னர், Reserve Bank of Australia அல்லது RBA எனப்படும் நாட்டின் மத்திய வங்கி நேற்று வட்டி விகிதத்தை உயர்த்தி, அரசின் செலவினமா அல்லது தனியார் தேவையா தொடர்ச்சியான பணவீக்கத்தைத் தூண்டுகிறது என்பது குறித்து கடுமையான அரசியல் விவாதத்தைத் தூண்டியுள்ளது. நிதிநிலையைப் பாதுகாத்து, வெளிப்புற அழுத்தங்களைக் கருவூலக்காப்பாளார் சுட்டிக்காட்டும் அதே வேளையில், அரசின் தற்போதைய கொள்கை அமைப்புகள் மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தண்டிப்பதாகவும், மாற்றுப் பொருளாதார கொள்கைகளை அரசு புறக்கணிப்பதாகவும் எதிர்க்கட்சியினர் வாதிடுகின்றனர். இதுகுறித்த செய்தியின் பின்னணியை, NewGen Consulting Australasia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவம் கொண்ட எமில் ராஜா அவர்களின் கருத்துகளுடன் எடுத்துவரும் நான் குலசேகரம் சஞ்சயன்.
    Mostra di più Mostra meno
    10 min
  • இன்றைய செய்திகள்: 04 பெப்ரவரி 2026 - புதன்கிழமை
    Feb 4 2026
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
    Mostra di più Mostra meno
    5 min
  • இலங்கை: கிவுல் ஓயா நதி நீர் திட்டத்திற்கு எதிராக போராட்டம்
    Feb 3 2026
    வடக்கின் நீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசு முன்வைத்துள்ள கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
    Mostra di più Mostra meno
    8 min
  • இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துகிறது!
    Feb 3 2026
    ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
    Mostra di più Mostra meno
    3 min
  • How to cater for your dietary restrictions - உணவுக் கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளுவது எப்படி? இதோ சில வழிமுறைகள்!
    Feb 3 2026
    Australia is known as the allergy capital of the world. Our diverse population also means that we express our religious beliefs, ethics, health and personal choices through the food we eat. We called on some experts to help us navigate all the labelling, certifications and resources that can inform our food choices. - பல்லின பல்கலாசார நாடான ஆஸ்திரேலியாவில் உணவு ஒவ்வாமை உள்ளவர்கள் அதிகம் என கூறப்படுகிறது. இந்த பின்னணியில் உணவுக் கட்டுப்பாடுகளை எவ்வாறு கவனத்தில் கொள்ளுவது என்பது குறித்து ஆங்கிலத்தில் Melissa Compagnoni எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
    Mostra di più Mostra meno
    11 min
  • இன்றைய செய்திகள்: 03 பிப்ரவரி 2026 - செவ்வாய்க்கிழமை
    Feb 3 2026
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
    Mostra di più Mostra meno
    5 min
  • ஆஸ்திரேலிய மகத்தான மனிதரின் 75 ஆண்டுகால தொப்பி 4.6 லட்சம் டாலருக்கு விற்பனை!
    Feb 2 2026
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் விளையாட்டின் மகத்தான மனிதர் Sir Donald Bradman 75 ஆண்டுகளுக்கு முன்னர் அணிந்திருந்த ‘Baggy green’ தொப்பி ஏலத்தில் பல லட்சம் டாலர்களுக்கு விற்பனையாகி உள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
    Mostra di più Mostra meno
    3 min